பெண்ணே எழு நீ இடியாக!....


பெண்ணே உன் பிறப்பு
மண்ணில் அது சிறப்பு.
நீ புராணம் ஒன்று இருப்பதை
புரட்டிப் பார்க்கவா பிறந்தாய்.
புதிய இதிகாசத்தை எழுதிவிடு!
சருகு நிலங்களையும்
சதி வலைகளையும் தாண்டி வா!
மரணம் நாளை வருமெண்றால்,
மண்ணில் வண்ணாத்திப் பூச்சி
வாழ மறந்திருக்கும்.
நிலவு தேய்ந்து போவதால்,
வானம் இருள் சூழவில்லையே!
புயற்காற்றும்இ பூகம்ப மழை வரினும்,
நானற் புற்கள் நலிந்து விடுவதில்லையே!
பெண்ணே எழு நீ இடியாக.

விடியல் உன் கையில் இருக்கு
விதவைப் பட்டம் உனக் கெதற்கு.
பாவி என பார் பூமி சொல்வதை
பேதை நீ பிடுங்கி எறி.
தாலி இழந்ததனால்
காலியாகவில்லை உன் மனம்.

நீ எதை இழந்து விட்டாய்!
மனக்கண்ணும் நம்பிக்கையும்
உள்ள உனக்கு
இடர்கண் கொண்டு
துன்பத்தில் துவளாதே!
நாளை சமூகத்தில்
நீயும் ஒரு நாயகி.
பெண்ணே எழு நீ இடியாக!

0 comments:

கருத்துரையிடுக